மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட திருவெண்காடு, வள்ளுவக்குடி, காத்திருப்பு, திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், நல்லூர், குன்னம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. மதியம் 2 மணிக்கு மேல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார நிலையத்தில் பணியாற்றாததால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கொண்டு இயங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் சீர்காழி.