திருவாரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பவர்களிடம் அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்.