திருவாரூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை பாரமரிப்பு இன்றி குப்பைகள் தேங்கி சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்.