பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-07-18 12:10 GMT

மயிலாடுதுறை அருகே சீர்காழி சாலையில் நாகங்குடி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் அவலநிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. பஸ்கள் நிற்காததால் அலுவலகத்திற்கு செல்வோரும் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாகங்குடி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதிவாணன், தேவனூர்.

மேலும் செய்திகள்