'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2022-11-23 17:22 GMT
  • whatsapp icon

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி காமராஜர் சிலை அருகில் பைபாஸ் கிராஸ் ரோட்டில் சாக்கடை நீர் தேங்கி சாலையில் சென்றது. இதனால் அந்த இடத்தில் சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி விபத்தில் சிக்குகின்றனர் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சாலையில் சாக்கடை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்