மதுபான கூடம் அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2022-07-15 16:44 GMT


ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி எதிரே மது பான கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மது பான கூடம் பள்ளி அருகிலேயே செயல்படுவதால் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் மதுவை குடித்து விட்டு சில இளைஞர்கள் மாணவிகளை கேலி செய்து வருகிறார்கள். இது பற்றி பல முறை போலீசில் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி எதிரே செயல்படும் மதுபானகூடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஒரத்தநாடு

மேலும் செய்திகள்