தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி வங்காரம்பேட்டை- தஞ்சை மெயின்ரோட்டில் மரத்தின் கிளை சாலையின் குறுக்கே வளைவு போல் செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பாபநாசம்