தஞ்சையில் மேரீஸ் கார்னர் அருகே புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. வண்டிக்காரத்தெரு அருகே பாலத்தில் கீழ் பகுதியில் சாலையில் கிடந்த மணல் பரப்பை துப்புரவு பணியாளர்கள் அள்ளி அப்புறப்படுத்தாமல் பாலத்தில் ஓரங்களில் குவித்து வைத்துள்ளனர். தற்போது காற்று வேகமாக அடித்து வருவதால் குவித்து வைக்கப்பட்ட மணல் காற்றில் பறந்து வாகனங்களில் செல்வோர் கண்களை பதம் பார்க்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் ஓரங்களில் உள்ள மணல் குவியலை முன் வர அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தஞ்சாவூர்.