தஞ்சாவூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்அருகே சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகளை துப்புரவு தொழிலாளர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு புகையினால் கண்எரிச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்பழகன், தஞ்சாவூர்