தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் புதிதாக கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் பொது மக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்