தேன் கூடுகள் அகற்றப்படுமா?
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இது தவிர விவசாயிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என எப்போதும் கலெக்டர் அலுவலகம் மக்கள் கூட்டத்தால் அலைமோதும். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் ஏராளமான தேன்கூடுகள் உள்ளன. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தேன் கூடுகளை கண்டு அச்சப்படுகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தேனீக்கள் வெளியேறி பொதுமக்களைவிரட்டி, விரட்டி கடித்தன. அப்போது தீயணைப்புத்துறையினர் வந்து தேன் கூடுகளை அப்புறப்படுத்தினர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு உள்ள தேன் கூடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.