வழிகாட்டி பெயர் பலகை வேண்டும்

Update: 2022-09-05 13:38 GMT


மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் நான்கு வழி சாலை சந்திப்பில் வழிகாட்டி பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த சாலை வழியாகத்தான் திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். இதனால் வெளிமாவட்ட பொதுமக்கள் வழி தெரியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டி பெயர் பலகை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆக்கூர்.

மேலும் செய்திகள்