நாய்கள் தொல்லை

Update: 2022-07-11 15:40 GMT

உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குள் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் கோவில் வளாகத்தில் சுற்றி த்திரியும் நாய்கள் பக்தர்களை விரட்டி கடிக்க வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சக்திவேல், தஞ்சாவூர்

மேலும் செய்திகள்