கூத்தாநல்லூரில் ஒரு வாரமாக மழை பெய்கிறது. இதனால், சாக்கடை கால்வாயில் மழை தண்ணீர் தேங்கி கொசு அதிக அளவில் உள்ளது.. இதனால், இந்த பகுதி பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், கூத்தாநல்லூர்.