திருவாரூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்