வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.

Update: 2022-08-31 15:46 GMT


கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் அரசு பள்ளி அருகில் திருவாரூர், மன்னார்குடி, வடபாதிமங்கலம் செல்லக்கூடிய மூன்று பிரிவு சாலை உள்ளது. அதனால், எந்த சாலையில் எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்று தெரியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பரிதவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால், மூன்று பிரிவு சாலைகளையும் அடையாளம் காட்டும் வகையில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.

பொது மக்கள், வடபாதிமங்கலம்.

மேலும் செய்திகள்