செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-31 15:41 GMT


சித்தர்காடு,மாப்படுகை ஊராட்சி இடையே இணைப்பு சாலையில் காவேரி ஆற்றின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பியில் உள்ள செடி, கொடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சித்தர்காடு

மேலும் செய்திகள்