திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திருக்களம்புதூர் கிராமத்திற்கு கும்பகோணம் -கொரடாச்சேரி வழியாக பஸ் இயக்கப்பட்டது. கொரனா காரணமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இது வரை அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பஸ் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்வம், கொரடாச்சேரி.