விளையாட்டு ஆசிரியர் வேண்டும்

Update: 2022-08-26 13:16 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியர் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விளையாட்டு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள், பூந்தோட்டம்

மேலும் செய்திகள்