குளம் பாதுகாக்கப்படுமா?

Update: 2022-08-24 14:36 GMT


தஞ்சையை அடுத்த திட்டையில் குரு பரிகார தலமாக வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குளத்தில் படித்துறையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள், திட்டை

மேலும் செய்திகள்