கிடப்பில் போடப்பட்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி

Update: 2025-04-27 20:20 GMT

போளூரை அடுத்த மேல்வில்ராயநல்லூர் கிராமத்தில் வேடியப்பன்கோவில் அருகில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க கம்பம் நடப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி விட்டன. எங்கள் பகுதி பொதுமக்கள் மின்பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள், கிடப்பில் போடப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.

-அய்யப்பன், போளூர். 

மேலும் செய்திகள்