மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2025-09-21 16:15 GMT

செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிப்பிடம், வணிக வளாகங்கள் உள்ள இடத்தில் போதுமான மின் விளக்குகள் இல்லாததால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள், வணிக வளாக கடை வியாபாரிகள் இலவச கட்டணக் கழிப்பிடத்துக்கு வந்து செல்லும் போது அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கம்பங்களை அமைத்து மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-கல்யாணசுந்தரம், செங்கம்.

மேலும் செய்திகள்