ஆபத்தான நிலையில் தொங்கும் மின்விளக்கு

Update: 2023-01-25 12:42 GMT



கலவையை அடுத்த அகரம் செல்லும் சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே மின் கம்பத்தில் விளக்கு தலைகீழாக தொங்கிய நிலையில் உள்ளது. மேலும் இந்த விளக்கு எரிவதும் இல்லை. அருகில் வங்கிகள், அய்யப்பன் கோவில், அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளது. மின்விளக்கு விழுந்து விபத்து நடப்பதற்கு முன் அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வரவேண்டும்.

-பாலு, கலவை.

மேலும் செய்திகள்