மின் இணைப்புக்காக காத்திருக்கும் குடிநீர் தொட்டி

Update: 2025-07-27 17:27 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு மீனவர் தெருவில் ஏற்கனவே 2 ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சிறுமின்விசை தொட்டிகள் பழுதடைந்துள்ளன. அவைகளை இன்னும் பழுதுப் பார்க்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது 3-வதாக ஆழ்துளை கிணற்றின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்காமல் வைத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சிறுமின்விசை குடிநீர் தொட்டியின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

-ஞானதீபம், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும் செய்திகள்