மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகள்

Update: 2025-09-21 16:29 GMT

ஆற்காடு நகராட்சி வீட்டுவசதி வாரியம் பகுதி-1 மற்றும் நகராட்சி மனைப்பிரிவில் உள்ள 20 தெருக்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசுகின்றன. தற்போது பெய்து வரும் மழையால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பிகள் மீது உரசும் மரக் கிளைகளை வெட்டி அகற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.டி. குணா, ஆற்காடு.

மேலும் செய்திகள்