ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் உள்ள பாலாறு பழைய மேம்பாலத்தில், இரவில் இருபக்கமும் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்தப் பாலத்தில் நடந்து செல்பவர்களும், வாகனங்களை ஓட்டி செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்படுகின்றன. இருட்டாக இருப்பதால் வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே பாலாறு பழைய மேம்பாலத்தில் மேல் உள்ள மின் விளக்குகளை சரி செய்து எரிய வைக்க வேண்டும்.
- கே.குணசேகரன், ராணிப்பேட்டை.