செங்கம் பேரூராட்சியில் ஜீவானந்தம் தெருவில் இருந்து ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு செல்லும் குறுக்கு தெருக்களில் மின் விளக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. குறிப்பாக ராஜவீதியில் இருந்து ஜீவானந்தம் செல்லும் குறுக்கு தெருவில் அடிக்கடி மின்விளக்குகள் பழுதடைகின்றன. பழுது சரி செய்யப்படாமல் உள்ளதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டுச் சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. பழுதான மின்விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குகளை பொருத்த மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலச்சந்திரன், செங்கம்.