காவேரிப்பாக்கம் ஒன்றியம் துரைபெரும்பாக்கம் கிராமத்தில் இருந்து ஆலப்பாக்கம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் வயல்வெளியில் உள்ள மின் மோட்டார்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒரு மின் கம்பம் பழுதடைந்து, சிமெண்டு பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-கஜேந்திரன், துரைபெரும்பாக்கம்.