தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக அரிசிக்கார தெரு, இந்திரா நகர், பெரிய கடைத்தெரு, அண்ணாநகர், நாடியம்மன் கோவில் ரோடு, சீனிவாசன் நகர், பாளையம் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. சாலையின் குறுக்கே அடிக்கடி ஓடுவதால் அடிக்கடி வாகன விபத்துக்களும் நடக்கிறது. மேலும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. எனவே பட்டுக்கோட்டையில் தெருநாய்களை பிடிக்க வேண்டும்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை.