எரியாத தெரு விளக்குகள்

Update: 2026-07-26 19:39 GMT

தாராபுரம் தாலுகா குப்பிச்சிபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின்கம்பத்தில் கடந்த 7 மாதங்களாக விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் இரவில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இது பற்றி பஞ்சாயத்து செயலரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெரு விளக்கை சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

-ஜெயகவுரி, தாராபுரம்.

மேலும் செய்திகள்