தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கல்லணை கால்வாய் செல்கிறது. இந்த கல்லணை கால்வாய் வழியாக மதுக்கூர் சாலைக்கு செல்லும் பாதையில் தெருவிளக்கு வசதி இல்லை. தாலுகா அலுவலகத்திற்கு வருபவர்கள் மற்றும் இதன் வழியாக தான் அருகில் உள்ள கிராமங்களுக்கும் பொதுமக்கள் செல்கிறார்கள். இருள் சூழ்ந்து இருப்பதால் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. மேலும் அங்கு நின்று மது அருந்துகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பட்டுக்கோட்டை