மதுரை ஒத்தக்கடை குடியிருப்பு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த மின் விளக்குகள் முறையான பராமரிப்பின்றி பகல் நேரத்திலும் தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது. இதனால் மின்சாரம் வீணாகுவதுடன், மின்விளக்குகளும் விரைவில் பழுதாகும் நிலை உள்ளது. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.