ஒளிராத மின்விளக்குகள்

Update: 2026-03-08 09:54 GMT

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் ஏராளமான பஸ்கள் வந்து செல்லும் இடத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகுமாரன், பல்லடம்.

மேலும் செய்திகள்