திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள ஆங்காடு-நியூ சன்சிட்டி பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். வெளிச்சம் இல்லாத சூழலால் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் இப்பகுதியில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.