ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-01-18 10:21 GMT

குண்டடம் அருகே உள்ள ஒத்தக்கடையிலிருந்து தும்பலப்பட்டி செல்லும் மெயின்ரோட்டின் ஓரத்தில் மின்மாற்றி உள்ளது. இதன் அருகே உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சிமெண்டு காரைகள பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படும் முன், ஆபத்தான மின்கம்பததை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சாமித்துைர, குண்டடம்.

மேலும் செய்திகள்