திருப்பூா் போயம்பாளையத்தில் இருந்து நஞ்சப்பா நகர் செல்லும் சாைலயில் 2-வது மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உயர் மின் விளக்கு அமைக்கப்பட்டது. மின் விளக்கு அமைத்து பல மாதங்கள் கடந்தும் எரிவதில்லை. இந்த பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் இரவு பணி முடிந்து வரும் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மின் விளக்கு அமைந்துள்ள பகுதி நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இங்கு அவ்வப்போது வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அப்துல், திருப்பூர்.