நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்திலிருந்து, பாலப்பட்டி செல்லும் சாலையில் எம்.ராசாம்பாளையம் பட்டவன் கோவில் மேடு அருகில் மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் அந்த செடிகளில் மின்சாரம் பாயும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், கால்நடைகள் தெரியாமல் தொட்டால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
-நாகராஜன், எம்.ராசாம்பாளையம்.