நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்னை, கடலூர், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு சாலையோரம் உள்ள மின் கம்பங்களில் ஒயர்கள் தாழ்வாக தொங்குகிறது. இதன்காரணமாக சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக தொங்கும் மின்சார ஒயர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நல்லதம்பி, பேட்டை.