ஆபத்தான மின்பெட்டி

Update: 2025-09-28 15:44 GMT

சேலம் அண்ணா பூங்கா எதிரே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. புதிய பஸ்நிலையம், ஜங்ஷன், ஓமலூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் செல்கின்றன. பஸ்சுக்காக பொதுமக்கள், பயணிகள் இந்த நிழற்கூடத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பயணிகள் நிழற்கூடத்தின் அருகே மின்பெட்டி திறந்த நிலையில் ஒயர்கள் கீழே தொங்கி கொண்டு உள்ளன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வரும்போது, திறந்த நிலையில் உள்ள மின்பெட்டியை குழந்தைகள் தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தொங்கி உள்ள ஒயர்களையும், ஆபத்தான நிலையில் திறந்துள்ள மின்பெட்டியையும் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், ரத்தினசாமிபுரம், சேலம்.

மேலும் செய்திகள்