ஓமலூர் அடுத்த புளியம்பட்டி ஊராட்சி 4-வது வார்டு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.