சிவகங்கை மாவட்டம் சிவகங்கை- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓ.புதூர் பஞ்சாயத்து அண்ணாநகர் கிராம பகுதி சாலையோரங்களில் உள்ள தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா?