பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சிநகர் இரட்டை வாங்கி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் பொருத்தப்பட்டு உள்ள தெருவிளக்குகளும் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அவசர தேைவக்கு கூட இரவில் வீடுகளை விட்டு வெளியே வர அப்பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.