புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே வடக்குத்தொண்டைமான்ஊரணி பகுதியில் விவசாய தேவைக்காக நடப்பட்ட பல மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கின்றன. இந்த மின்கம்பங்கள் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் நடமாட்டத்தின் போது முறிந்து விழுந்தால், பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் நட்டு மின் வினியோகம் செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.