கடலூர் வெள்ளிமோட்டான் தெருவில் சாலையின் அருகில் மின்கம்பம் ஒன்று அமைந்துள்ளது. இதன் சிமெண்டு காரைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடு போல் மின்கம்பம் காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே எலும்புக்கூடான மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டியது அவசியமாகும்.