திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் பகுதியில் திருமயம் மூன்று ரோடு சந்திக்கும் முக்கம் உள்ளது. இந்த சாலை வழியாக திருமயம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையின் ஒருபுறம் வயல்வெளியும், மறுபுறம் கண்மாயும் உள்ள நிலையில், முக்கம் பகுதியில் இருந்து பைரவர் கோவில் வரை சுமார் அரை கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில் தெருவிளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.