விபத்து அபாயம்

Update: 2026-02-22 17:55 GMT

மதுரை கோமதிபுரம் ஆவின் நகர் முதல் மெயின் ரோட்டின் திருப்பத்தில் உள்ள மின் கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள், இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.

எனவே மின்வாரிய அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக விரைந்து மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்