ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தாண்டியப்பனூர் கிராமத்தில் மின் கம்பத்தில் செடி, மரம், கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் இந்த மின் கம்பம் செல்லும் பகுதி அருகிலேயே விளையாடுவதால் மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது. தற்போது பருவமழை தொடங்கி விட்டது. எனவே போர்க்கால அடிப்படையில் மின் கம்பத்திலும், மின்சார ஒயர்களிலும் படர்ந்து காணப்படும் செடி, கொடி, மரங்களை அகற்றப்படுமா?
-பொதுமக்கள், தாண்டியப்பனூர்.