ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-09-21 10:08 GMT

கணபதி சத்தி ரோடு அத்திப்பாளையம் பிரிவில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும் சாலையில் பல மாதங்களாக தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்