விருதுநகரில் இருந்து பேராலி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஊருணி அருகே உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்த நிலையில் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?