தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2026-02-22 11:11 GMT

குத்தாலம் பகுதி திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகள் மரக்கிளைகளில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் மின்வெட்டு பிரச்சினை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்